"அமெரிக்காவின் பொற்காலம் ஆரம்பம்" - அதிபர் டொனால்ட் டிரம்ப் உரை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத மற்றும் சக்திவாய்ந்த தீர்ப்பை தங்களுக்கு வழங்கியுள்ளதாக அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு ட்ரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான 270 எலக்டோரல் வாக்குகளைப் பெற்றதையடுத்து ட்ரம்ப் நாட்டின் 47-வது அதிபராக பதவியேற்பது உறுதியாகியுள்ளது. இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, ஃபுளோரிடாவில் உள்ள பாம் பீச் கவுண்டி கன்வென்ஷன் சென்டரில் ஆதரவாளர்களிடம் ட்ரம்ப் உரையாற்றினார். அப்போது ஆதரவாளர்கள் யுஎஸ்ஏ, யுஎஸ்ஏ என ஆரவாரத்துடன் வெற்றி முழக்கமிட்டனர். ஆதரவாளர்களின் ஆரவாரத்துக்கு இடையெ உரையாற்றிய டிரம்ப், யாரும் நினைக்காத தடைகளைக் கடந்து, நம்பமுடியாத அரசியல் வெற்றியைப் பெற்றுள்ளதாக தெரிவித்தார். இந்த நாட்டிலும் அதற்கு அப்பாலும் இப்படி எங்கும் இதுபோல் நடந்ததில்லை என கூறிய அவர்,  உடலில் உள்ள ஒவ்வொரு சுவாசத்திலும் அமெரிக்கா மக்களுக்காக போராடுவேன் என்றும் வலுவான பாதுகாப்பு மற்றும் வளமான அமெரிக்காவை மீண்டும் உருவாக்கும் வரை ஒய்வெடுக்க மாட்டேன் என்றும் சூளுரைத்தார். 

குடியேற்றம் மற்றும் எல்லைப் பிரச்சினைகளை தீர்க்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த டிரம்ப், அமெரிக்கா பற்றிய அனைத்தையும் சரி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார். அமெரிக்காவின் வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் மறுபிரவேசத்தை கண்டுள்ளதாகவும் மிகப்பெரிய அன்பை உணர்ந்துள்ளதாகவும் ட்ரம்ப் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். தேர்தல் வெற்றிக்கு  துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது இந்தியவம்சாவளி மனைவி உஷா வான்ஸ் ஆகியோருக்கும் ட்ரம்ப் பாராட்டு தெரிவித்தார்.

Night
Day