"பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் சிறப்புமிக்கதாக இருக்கும்" - போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் நம்பிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

போர்க்களத்தில் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு காண முடியாது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

2 நாள் அரசு முறை பயணமாக போலந்து சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க்கை சந்தித்து பேசினார். இதையடுத்து இருதரப்பு உறவுகள், சர்வதேச விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்து இருநாட்டு தலைவர்களும் விவாதித்தனர். போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் உடனான சந்திப்புக்குப் பின் இருநாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியா மற்றும் போலந்து இடையேயான உறவு தொடர்ந்து வலுவடைந்து வருவதாகவும், சர்வதேச அரங்குகளில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். தற்போதுள்ள சர்வதேச சவால்களை எதிர்கொள்ள, ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில், சீர்திருத்த நடவடிக்கைகள் தேவை எனக்கூறிய பிரதமர் மோடி, இதை இரு நாடுகளும் வலியுறுத்துவதாக தெரிவித்தார்.

Night
Day