"ரஷ்யாவுடனான தொடர்பை நிறுத்திக்கொள்ள இந்தியாவை வலியுறுத்துவோம்" - மேத்யூ மில்லர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரஷ்யாவுடனான தொடர்பை நிறுத்திக்கொள்ளுமாறு இந்தியாவை நிச்சயம் வலியுறுத்துவோம் என அமெரிக்க வெளியுறுவுத்துறை தெரிவித்துள்ளது. 22-வது இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டை நடத்துவதற்கான புதினின் அழைப்பை ஏற்று மோதி ரஷ்யாவுக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர், ரஷியாவுடன் தொடர்பு வைத்திருக்கும் மற்ற நாடுகளை போல, இந்தியாவிடமும், உக்ரைன் மோதலுக்கான ஐ.நா. தீர்மானத்தை பின்பற்ற வேண்டுமென வலியுறுத்துவோம் என தெரிவித்தார். நட்பு நாடு என்ற அடிப்படையில் இந்தியாவிடம் தங்களது வருத்தத்தை தெரிவிப்போம் எனவும் அமெரிக்க அமைச்சர் மேத்யூ மில்லர்  தெரிவித்தார். 

varient
Night
Day