அடுத்த மாதம் இந்தியா வருகிறார் அனுர குமார திச நாயகே

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே அடுத்த மாதம் இந்தியா வருகிறார். இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து கடந்த 14ம் தேதி நடைபெற்ற இலங்கை நாடாளுமன்ற தேர்தல் தேசிய மக்கள் சக்தி கூட்டணி அபார வெற்றி பெற்று, பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று பதவியேற்றார். இந்நிலையில், இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே அடுத்த மாதம் மத்தியில் இந்தியா வர உள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் அழைப்பை ஏற்று  அவர், இந்திய பயணம் வரவுள்ளதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜிதா ஹெராத் தெரிவித்துள்ளார். இந்த பயணத்தின்போது பிரதமர் மோடியை, இலங்கை அதிபர் சந்தித்து பேசவுள்ளார். 

Night
Day