அதிகளவில் வெளிநாட்டினர் குடியேறுவதை தடுக்க நியூசிலாந்து அரசு முடிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நியூசிலாந்தில் அதிகளவில் வெளிநாட்டினர் குடியேறுவதால் குடியேற்ற விதிகளை கடுமையாக்‍க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.


கடந்த ஆண்டு எப்போதும் இல்லாத வகையில் ஒரு லட்சத்து 73 ஆயிரம்  வெளிநாட்டினர் நியூசிலாந்தில் குடியேறி உள்ளனர். இதனால் தங்களது நாட்டு குடியேற்ற விதிகளை கடுமையாக்‍கவும் மாற்றி அமைக்‍கவும் அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி குறைந்த திறன் கொண்ட பணியாளர்களுக்‍கான வேலை வாய்ப்பு விசா காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைத்துள்ளது. அதிக திறன் கொண்ட பணியாளர்கள், ஆசிரியர்கள் பற்றாக்‍குறை நிலவுவதாகவும் அதற்கு ஏற்ப நடவடிக்‍கை எடுத்து வருவதாகவும் நியூசிலாந்து குடியேற்றத்துறை அமைச்சர் எரிகா ஸ்டான்ஃபோர்டு தெரிவித்துள்ளார்

Night
Day