அதிபராக இருப்பதை விட ஜனநாயகத்தை பாதுகாப்பதே மிக முக்கியம் - அதிபர் ஜோ பைடன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாட்டை ஒருங்கிணைக்கும் நோக்கில் அடுத்த தலைமுறைக்கு தான் வழிவிடுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தலில் இருந்து விலகிய பிறகு ஜோ பைடன் முதல் முறையாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், துணை அதிபர் கமலா ஹாரிஸை மிகவும் திறமையானவர்' என பாராட்டினார். மேலும் நாட்டின் அதிபராக இருப்பதை விட ஜனநாயகத்தை பாதுகாப்பதே மிக முக்கியம் என தெரிவித்த ஜோ பைடன், அதனாலேயே தான் அடுத்த தலைமுறைக்கு வழிவிட்டுருப்பதாகவும், நாட்டை ஒருங்கிணைக்க அதுவே சிறந்த வழி என்றும் தெரிவித்தார்.

Night
Day