அதிபராக யார் வந்தாலும் அமெரிக்கா தனிமைப்படுத்திக் கொள்ளும் - ஜெய்சங்கர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அடுத்த அதிபராக யார் வந்தாலும் அமெரிக்கா தனிமைப்படுத்திக் கொள்ளும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கருத்துத் தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அமெரிக்கக் கொள்கையின் நீண்ட காலப் போக்கை தேர்தல் மாற்றியமைக்க வாய்ப்பில்லை என்றார். ஒபாமாவில் தொடங்கி, அமெரிக்கா தனது உலகளாவிய கடமைகள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக உள்ளதாக கூறிய அவர், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புக்கள் வெளியேறியதை சுட்டிக் காட்டினார். ஆனால் இது போன்ற விஷயங்களில் டிரம்ப் மிகவும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் இருக்கலாம் என்றும் கூறினார். அமெரிக்கா கொண்டிருந்த ஆதிக்கம் மற்றும் தாராள மனப்பான்மை தொடராத ஒரு உலகத்திற்குத் தயாராக வேண்டும் என்று நினைப்பதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார். 

Night
Day