அதிபர் டிரம்பிற்கு உலக நாட்டு தலைவர்கள் வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டிரம்பிற்கு, பிரதமர் மோடி மற்றும் உலக தலைவர்கள் பலரும் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்காவின் 47-வது அதிபராக பதிவியேற்றுக்கொண்ட டொனால்டு டிரம்ப்பிற்கு, உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். "அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்றுள்ள எனது நண்பர் அதிபர் டொனால்டு டிரம்பிற்கு வாழ்த்துகள் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையிலும், உலகிற்கு சிறந்த எதிர்காலத்தை வடிவமைக்கும் வகையிலும், மீண்டும் ஒருமுறை இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்துள்ளார். உங்கள் எதிர்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள் எனவும், அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

புதிய அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு வாழ்த்து தெரிவித்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், டிரம்ப் நிர்வாகத்தில் அமெரிக்கா - ரஷ்ய நாடுகளிடையே நல்லுறவு ஏற்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்காவுடனான அமைதியான உறவுக்கு ரஷ்யா தயாராக இருப்பதாக அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

அதிபர் டிரம்பிற்கு வாழ்த்து தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, புதிதாக பதவியேற்ற அதிபர் டிரம்ப் மற்றும் அமெரிக்க மக்களுக்கு தனது வாழ்த்துக்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நாள், மாற்றத்தின் நாளாகவும், உலகளாவிய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான தொடக்கமாகவும் அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக நாடுகளின் வெற்றிக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும், அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். 

varient
Night
Day