எழுத்தின் அளவு: அ+ அ- அ
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததையடுத்து வாக்குகளை எண்ணும் பணி உடனடியாக இன்று காலை தொடங்கியது. மொத்தமுள்ள 50 மாகாணங்களில் தற்போது வரை 40 மாகாணங்களின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதில், ஃபுளோரிடா, தெற்கு கரோலினா, வட கரோலினா, மேற்கு வர்ஜினியா, ஒஹியோ, இண்டியானா, கென்டகி, டென்னஸி, அலபாமா, மிசிசிப்பி, லூசியானா, அர்கன்சாஸ், மிசோரி, லோவா, வடக்கு டகோடா, தெற்கு டகோடா, நெபரஸ்கா, கான்சாஸ், ஒக்லஹோமா, டெக்சாஸ், வயோமிங், மோண்டனா, இதாஹோ மற்றும் யூட்டா என 24 மாகாணங்களில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். விஸ்கான்சின், மிச்சிகன், மற்றும் பென்சில்வேனியா மாகாணங்களில் டிரம்ப் முன்னிலையில் உள்ளார்.
வாஷிங்டன், ஓரிகன், கலிஃபோர்னியா, கொலராடோ, நியூ மெக்சிகோ, இலினாய்ஸ், நியூயார்க், வெர்மாண்ட், நியூ ஜெர்சி, வர்ஜினியா, மேரிலாண்ட், கனெக்டிகட், மசாசூசெட்ஸ், ஹவாய், டெலாவர், ரோட் ஐலாண்ட் உள்ளிட்ட 16 மாகாணங்களில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் வென்றுள்ளார்.
270 எலக்டோரல் வாக்குகளை பெற்றால் ஆட்சியமைக்கலாம் என்ற நிலையில், ட்ரம்ப் 270 எலக்டோரல் வாக்குகளுடன் தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார். 214 வாக்குகளுடன் கமலா ஹாரீஸ் 2-ம் இடத்தில் உள்ளார். இன்னும் 10 மாகாணங்களில் முடிவு வர வேண்டியிருந்தாலும் ட்ரம்ப் பெரும்பான்மை பெற்று விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் தனது தேர்தல் இரவு உரையை கமலா ஹாரிஸ் ரத்து செய்துள்ளார்.