அதிபர் தேர்தலில் ட்ரம்ப் போட்டியிட ஏற்பட்ட தடை நீங்கியது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலில் இருந்து டொனால்ட் ட்ரம்ப்பின் பெயரை நீக்கக்கூடாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  2024ஆம் அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து ட்ரம்பின் பெயரை நீக்க வேண்டும் எனக்கூறி கொலராடோ நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அப்போது, கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த கிளர்ச்சி விவகாரத்தை சுட்டிக்காட்டிய கொலராடோ நீதிமன்றம், அம்மாகாண அதிபர் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இருந்து ட்ரம்ப்பின் பெயரை நீக்க ஆணையிட்டது. இதை எதிர்த்து டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த அமெரிக்க உச்சநீதிமன்றம், அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இருந்து ட்ரம்ப்பின் பெயரை நீக்கக்கூடாது என உத்தரவிட்டது. இதன் மூலம் அதிபர் தேர்தலில் ட்ரம்ப் போட்டியிட எழுந்த சிக்கல் முடிவுக்கு வந்துள்ளது.

Night
Day