அதிபர் தேர்தல் தொடர்பான வன்முறை- இதுவரை 11 பேர் உயிரிழப்பு!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வெனிசுலாவில் அதிபர் தேர்தல் தொடர்பாக எழுந்த வன்முறையில் இதுவரை 

11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்த்தி தகவல் வெளியாகியுள்ளது. வெனிசுலா அதிபர் தேர்தலில் மீண்டும் நிக்கோலஸ் மதுரோ வெற்றிபெற்ற நிலையில், அவருக்கு எதிராக வன்முறை வெடித்துள்ளது. அதிபர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தியபோது, ஏற்பட்ட வன்முறையில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி ரப்பர் தோட்டாக்களால் சுட்டனர். இந்த வன்முறையில் இதுவரை 11 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Night
Day