அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் வாக்குறுதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தாம் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், அமெரிக்காவில், மக்களின் வாழ்க்கை செலவுகளை குறைப்பது தொடர்பான பல்வேறு திட்டங்களை செயல்படுத்த இருப்பதாக துணை அதிபரும், வேட்பாளருமான கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

இ-மெயில் மூலம் நவம்பர் 4 ஆம் தேதியே தனது வாக்கை செலுத்திய அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் அவர் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், அமெரிக்க அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களின் விலை உயர்வுக்கு தேசிய அளவில் தடை விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
குடும்பங்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு வரி குறைப்பு மற்றும் முதன்முறையாக வீடு வாங்குபவர்களுக்கு முன்பணம் வழங்கும் திட்டம் உள்ளதாக குறிப்பிட்டார். இதேபோன்று, குடியுரிமை திட்ட நடைமுறையில் உள்ள குறைகளை சரி செய்யப்போவதாகவும் கமலா ஹாரிஸ் தெரிவித்தார். 

Night
Day