அதிபர் வேட்பாளர் தேர்தலில் குடியரசு கட்சி தலைவர் ட்ரம்ப் வெற்றி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளருக்கான போட்டியில், இடாஹோ, மிச்சிகன், மிசவ்ரி மாகாண வாக்கெடுப்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார். அமெரிக்காவில் நடப்பு ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிட உள்ள குடியரசு கட்சி வேட்பாளர்கள் மாகாண ரீதியாக ஆதரவு திரட்டி வருகின்றனர். குடியரசு கட்சியினர் மத்தியில் இதுவரை நடைபெற்ற வாக்கெடுப்பில் முன்னாள் அதிபர் ட்ரம்ப் முன்னிலை வகித்து வருகிறார். அந்த வகையில் இடாஹோ மாகாணத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ட்ரம்புக்கு ஆதரவாக 84.9 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேவுக்கு 13.2 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இடாஹோவை தொடர்ந்து மிச்சிகனில் 98 சதவீத ஆதரவுடனும், மிசவ்ரி மாகாணத்தில் 100 சதவீத ஆதரவையும் பெற்று டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார்...

Night
Day