அமெரிக்காவின் ஆதரவு இல்லாவிட்டாலும் இஸ்ரேல் தனித்து செயல்படும்' - பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராஃபா நகரில் தாக்குதல் நடத்தும் விவகாரத்தில் அமெரிக்காவின் ஆதரவு இல்லா விட்டாலும் இஸ்ரேல் தனித்து செயல்படும் என அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். காசாவின் தெற்கு எல்லை நகரமான ராஃபாவில் தரைவழி ராணுவ தாக்குதலை இஸ்ரேல் விரிவுபடுத்தினால் மிகப்பெரிய மனித அழிவுக்கான அபாயம் ஏற்படலாம் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரித்து வருகின்றன. ஆனால், இதனை மறுத்துள்ள நெதன்யாகு, ராஃபா தற்காலிக முகாமில் தஞ்சமடைந்துள்ள மக்கள் எளிதாக போரில் இருந்து வெளியேறி விடுவார்கள் எனக் கூறியுள்ளார். ராஃபா விவகாரம் குறித்த முரணானது, நட்பு நாடுகளுக்கு இடையேயான விரிசல்களில் மற்றுமொன்றுதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Night
Day