அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணி ஆனார் இந்திய வம்சாவளியை சேர்ந்த உஷா வேன்ஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய வம்சாவளியை சேர்ந்த உஷா வேன்ஸ், அமெரிக்காவின் இரண்டாம் பெண்மணி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். 

அமெரிக்காவில் அதிபர் மனைவியை நாட்டின் முதல் பெண்மணி என்றும், துணை அதிபர் மனைவியை இரண்டாவது பெண்மணி என்றும் அழைப்பது வழக்கம். இந்நிலையில் அமெரிக்காவின் புதிய துணை அதிபராக ஜே.டி.வேன்ஸ், பதவியேற்றதை தொடர்ந்து அவரது மனைவி உஷா வேன்ஸ் அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணி ஆகியுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இத்தகைய பெருமையை பெறுவது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில், பதவியேற்புக்கு பின் உரையாற்ரிய அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப், ஜே.டி.வேன்ஸ் மனைவி உஷா வேன்ஸ் மிகவும் புத்திசாலி என பாராட்டினார். 

Night
Day