அமெரிக்காவின் 47வது அதிபராக பதவி ஏற்ற டிரம்ப்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவின் 47வது அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார். தான் பதவியேற்றதை தொடர்ந்து அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டதாக கூறி வெள்ளை மாளிகையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிர வைத்தார்.



அமெரிக்காவில் கடந்தாண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸை தோற்கடித்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் அமோக வெற்றிபெற்றார். இந்நிலையில், தலைநகர் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டடமான கேபிடல் உள்ளரங்கில் பல்வேறு நாட்டு தலைவர்கள் மத்தியில் அமெரிக்க அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகைப்புரிந்த டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலானியா டிரம்ப்பை முன்னாள் அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரின் மனைவி ஜில் பைடன் வரவேற்றனர்.



இதேபோல், பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வருகைப்புரிந்த துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ் மற்றும் அவரின் மனைவி உஷாவை முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் அவரின் கணவர் டக்ளஸ் வரவேற்றனர்.




அமெரிக்க சட்டப்படி, துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.டி.வேன்ஸ், முதலில் பதவியேற்றார்.




இதையடுத்து அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப்புக்கு அந்நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.




அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கும் சமயத்தில் பீரங்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.







Night
Day