அமெரிக்காவில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மருத்துவமனைக்குள் புகுந்து விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ஒன்று, மருத்துவமனைக்குள் புகுந்து விபத்தை ஏற்படுத்தியது. ஆஸ்டின் நகரில் உள்ள மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்குள் அதிவேகமாக புகுந்த வாகனம், அங்கிருந்த சுவற்றில் மோதி நின்றது. இந்த விபத்தில் வாகனத்தின் ஓட்டுநர் உயிரிழந்து விட்டதாகவும், மருத்துவமனையில் இருந்த 2 சிறுவர்கள் உள்ளிட்ட 5 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்து எதிர்பாராத விதமாக நடந்துள்ளதே தவிர, வேறு எந்த சதித்திட்டமும் கிடையாது என ஆஸ்டின் நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

varient
Night
Day