அமெரிக்காவில் தீ விபத்து - இந்திய வம்சாவளி இளைஞர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞரும், ஊடகவியலாளருமான ஃபசில்கான் என்ற இளைஞர் எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து தீப்பிடித்த விபத்தில் பரிதாபமாக பலியானார். கல்வி சம்பந்தமான தகவல்களை வெளியிடும் ஹெச்சிங்கர் குழுமத்தில் ஊடகவியலாளராக பணியாற்றி வந்த ஃபசில் கான், நியூயார்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் எலக்ட்ரிக் பைக் ஒன்றின் பேட்டரி வெடித்து தீப்பற்றியதில், அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் தீ வேகமாக பரவியுள்ளது. இதனால் அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்த பலரும் ஜன்னலை உடைத்துக்கொண்டு கயிறு மூலம் கீழே குதித்தனர். எனினும் 18 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஃபசில் கான் பரிதாபமாக பலியானார். 

Night
Day