அமெரிக்காவில் நோயாளிகளை கொன்ற செவிலியர் - 760 ஆண்டுகள் சிறை தண்டனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவில் 17 நோயாளிகளை கொலை செய்த கொடூர செவிலியருக்கு 760 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பென்சில்வேனியாவில் உள்ள 41 வயது செவிலியர் ஹீதர் பிரஸ்டீ என்பவர் 5க்கும் மேற்பட்ட முதியோர் மறுவாழ்வு மையங்களில் செவிலியராக பணியாற்றி வந்தார். மறுவாழ்வு மையங்களில் உள்ள நோயாளிகளின் நீரிழிவு அளவை பொருட்படுத்தாமல் அதிகப்படியான இன்சுலின் அளித்ததால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையின் முடிவில் அவருக்கு, மூன்று ஆயுள் தண்டனையும், 760 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

Night
Day