அமெரிக்காவில் பனிப்பொழிவால் தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கடும் பனிப்பொழிவால் தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டு பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். சியாரா நெவாடா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்புயலும், மழையும் பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பனிகட்டிகள் பல அடி உயரத்தில் உறைந்து கிடப்பதால் முக்கிய சாலைகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் பொதுமக்கள் சாலையில் நடமாட முடியாத சூழல் உருவான நிலையில், 22 ஆயிரம் வீடுகளில் மின்சார பாதிப்பு ஏற்பட்டது. மேலும் பனிச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதால், வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு மக்களை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Night
Day