அமெரிக்காவில் போயிங் விமானத்தின் தரத்தில் கோளாறு - தணிக்கை ஆய்வில் தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவில் போயிங் நிறுவனத்தின் உற்பத்தி தரம் மிக மோசமாக இருப்பதாக அந்நாட்டில் விமான கட்டுப்பாட்டு நிர்வாகம் நடத்திய தணிக்கை ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த ஜனவரி 7ஆம் தேதி அலாஸ்கா அருகே வானில் பறந்துகொண்டிருந்த போயிங் 737 மேக்ஸ் விமானத்தின் கதவு காற்றில் பறந்து போனது. இதனால் பயணிகள் அனைவரும் கடும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். இதையடுத்து போயிங் விமானங்களை தணிக்கை செய்ய உத்தரவிடப்பட்டது. கடந்த ஆறு வாரங்களாக அமெரிக்க விமான கட்டுப்பாட்டு நிர்வாகம் நடத்திய 89 முறை தணிக்கை ஆய்வில் 33 முறை போயிங் விமானத்தின் தரத்தில் கோளாறு இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. போயிங் விமானத்துக்கு உதிரி பாகங்களை சப்ளை செய்யும் ஸ்பிரிட் ஏரோசிஸ்டம்ஸ் உற்பத்தி செய்யும் பல்வேறு பாகங்கள் தரமற்று இருப்பதாக தணிக்கை ஆய்வில் தெரியவந்துள்ளது.

Night
Day