அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு - 7 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவில் முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீதான துப்பாக்கிச்சூடு பதற்றம் அடங்குவதற்குள் அலபாமா மாகாணத்தின் இரு வேறு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒரு சிறுவன் உள்பட 7 பேர் உயிரிழந்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

பா்மிங்காம் பகுதியில் ஒரு காரின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காருக்குள் இருந்த ஆண், பெண் மற்றும் ஒரு சிறுவன் கொல்லப்பட்டனா். அதே பகுதியில் உள்ள ஒரு இரவு விடுதியில் நடந்த மற்றொரு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் விடுதிக்குள் 2 பெண்களும், வெளியில் நடைபாதையில் ஒருவரும் கொல்லப்பட்டனா். மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 9 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஒருவா் உயிரிழந்தாா்.

varient
Night
Day