அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் - புதின்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உக்ரைன் மற்றும் அணு ஆயுத விவகாரம் தொடர்பாக, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரென ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் 2-வது முறையாக பதவியேற்றுள்ளார். இந்நிலையில் புதிய ட்ரம்ப் நிர்வாகம் விருப்பம் தெரிவித்தால் அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தத் தயார் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், நெருக்கடியின் மூல காரணங்களை அகற்றுவதே மிக முக்கியமான விஷயம் என்றும், தாங்கள் இதுகுறித்து பலமுறை பேசியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  முன்னதாக, தான் பதவியேற்றால் 24 மணி நேரத்திற்குள் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று ட்ரம்ப் உறுதியளித்திருந்த நிலையில், புதின் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Night
Day