எழுத்தின் அளவு: அ+ அ- அ
குவாட் உச்சிமாநாட்டில் பங்கேற்க 3 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க நேற்றிரவு சுமார் 8 மணியளவில் அமெரிக்காவின் பிலடெல்பியா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து, கிரீன்வில்லே நகரிலுள்ள ஜோ பைடன் இல்லத்திற்குச் சென்ற பிரதமர் மோடியை அதிபர் ஜோ பைடன் ஆரத்தழுவி வரவேற்றார்.
இது தொடர்பாக, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, தனக்கு விருந்து அளித்த ஜனாதிபதி ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், தங்கள் பேச்சு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றும் இந்த சந்திப்பின் போது பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வாய்ப்பு கிடைத்தது என்றும் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, டெலாவரின் வில்மிங்டன் நகரில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும், உக்ரைன் மற்றும் காசாவில் நடக்கும் போர்களை முடிவுக்கு கொண்டு வந்து அமைதி தீர்வு கண்டறிவதற்கான வழிகளை ஆராயவும் விவாதங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டை தொடர்ந்து, பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன் இடையே இருதரப்பு தரப்பு பேச்சுவார்த்தை நடக்கிறது.