அமெரிக்கா வசம் வந்தால் காசா பகுதி எப்படி இருக்கும் - ஏ.ஐ. வீடியோ வெளியிட்டார் டிரம்ப்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவின் வசம் சென்ற பின்னர் காசா எப்படி இருக்கும் என்பது பற்றிய ஏ.ஐ. வீடியோ ஒன்றை டெனால்ட் டிரம்ப் வெளியிட்டு உள்ளார். 

போர் நிறுத்த ஒப்பந்த்த்தை அடுத்து காசா மீது இஸ்ரேல் நடத்திவந்த தாக்குதல் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், சில வாரங்களுக்கு முன் காசாவை எடுத்து கொள்ள விரும்புவதாக டிரம்ப் அறித்து அதிர்வலைகளை ஏற்படுத்தினார். காசாவை அமெரிக்கா வசப்படுத்தினால், அதன் பின்னர் காசா எப்படி இருக்கும் என்பது பற்றிய செயற்கை நுண்ணறிவு வீடியோ ஒன்றை டிரம்ப் வெளியிட்டுள்ளார். போரால் சீரழிந்த காசா தற்போது எப்படி உள்ளதோ, அதுபோன்ற காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது. அதன் பின்னர், காசா எப்படி மாறும் என்பது அதில் இடம் பெற்றுள்ளது. அமைதியான கடற்கரை, வானுயர்ந்த கட்டிடங்கள் என ஆடம்பரமாக காணப்படும் காசாவில், டிரம்பின் சிலை காணப்படுகிறது டிரம்பிற்கு நெருக்கமான எலான் மஸ்க், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோரும் அந்த வீடியாவில் இடம் பெற்றுள்ளனர்.

Night
Day