அமெரிக்கா - குருத்வாராக்களில் குடியேற்ற அமலாக்க அதிகாரிகள் சோதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் குடியேற்ற அமலாக்க அதிகாரிகள், நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சியில் உள்ள குருத்வாராக்களுக்குச் சென்று சட்டவிரோத குடியேறிகள் உள்ளனரா என சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோதனை சீக்கிய அமைப்புகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. ஆனால், குற்றவாளிகள் இனி கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அமெரிக்காவின் பள்ளிகளிலும் தேவாலயங்களிலும் ஒளிந்து கொள்ள முடியாது என்று குடியேற்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.  குருத்வாரா மற்றும் தேவாலயங்கள் போன்ற வழிபாட்டுத் தலங்களில் சோதனை நடத்த பைடன் நிர்வாகம் விதித்திருந்த தடையை அதிபர் ட்ரம்ப் நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Night
Day