அமெரிக்கா: சடலமாக மீட்கப்பட்ட இந்திய குடும்பத்தினர் உடல்களில் துப்பாக்கி குண்டு துளைத்த காயம் கண்டுப்பிடிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இந்திய குடுபத்தினரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்த காயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சான் மேடியா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கேரளாவை சேர்ந்த சுஜித்-பிரியங்கா தம்பதினர் மற்றும் அவரது 2 குழந்தைகள் நேற்று சடலமாக மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கிருந்த கைத்துப்பாக்கி மற்றும் மருந்து பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இந்திய குடுபத்தினரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்த காயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

varient
Night
Day