அமெரிக்கா: வீடுகள் மற்றும் சாலைகளை சூழ்ந்த காய்ந்த புல் சுருள்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவின் தெற்கு ஜோர்டானில் பலத்த காற்றில் அடித்து வரப்பட்ட காய்ந்த புற்கள், சுமார் 10 அடி உயரத்துக்கு எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடும் வறட்சியில் இருக்கும் தெற்கு ஜோர்டான், உடாவ், நவாடா பகுதிகளில் சருகு போல் காய்ந்த புல் வகை ஒன்று, காற்றில் ஒன்றாக சேர்ந்து உருண்டு பறந்தது. நவாடாவின் சாலைகளில் சுமார் 10 அடி உயரத்திற்கு எழுந்து அச்சுறுத்தியது. உட்டாவ், தெற்கு ஜோர்டான் பகுதிகளில் வீடுகளை காய்ந்த புற்கள்சூழ்ந்ததால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். வெளியில் நிறுத்தியிருந்த கார் உள்ளிட்ட வாகனம் மற்றும் சாலைகளை புல் சுருள்கள் மூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஜே.சி.பி. இயந்திரம் மூலம், புல்சுருள்கள் அகற்றப்பட்டன. எனினும், வறண்ட சூறாவளி காற்று மற்றும் புல்சுருள்கள் படையெடுப்பால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். 

Night
Day