அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகன் குற்றவாளி என பரபரப்பு தீர்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடந்த 2018 ஆம் ஆண்டில் முறைகேடாக துப்பாக்கி வாங்கியது தொடர்பாக அமெரிக்க அதிபர் பைடன் மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்க அதிபர் பைடன் மகன் ஹண்டர் பைடன் கட்டாய துப்பாக்கி வாங்கும் படிவத்தை பயன்படுத்தாமல் துப்பாக்கி வாங்கியதாகவும், தான் போதை மருந்து பயன்படுத்தாத நபர் என தவறான தகவலை அளித்ததுடன், அந்த துப்பாக்கியை சட்டவிரோதமாக 11 நாட்கள் வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மேரிலென் நோரிகா, அமெரிக்கஅதிபர் பைடனின் மகன் ஹண்டர் பைடன்குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அதிகபட்சமாக அவருக்கு 25 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்படலாம். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் ஹண்டர் பைடன் வழக்கு மீது வந்துள்ள இந்த தீர்ப்பு அதிபர் பைடனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

varient
Night
Day