அமெரிக்க இராணுவத்தில் 5% ஆட்களை குறைக்க முடிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்க ராணுவத்தில் 5 சதவீதம் ஆட்களை குறைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. உலகில் சக்தி வாய்ந்த ராணுவ படைகளை கொண்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்க தரைப்படையில் 4 லட்சத்து 50 ஆயிரம் வீரர்களும், 50 ஆயிரம் ரிசர்வ் படைவீரர்களும் பணி புரிந்து வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க ராணுவத்துக்கான நிதியில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதமாக, ராணுவத்தில் ஆட்குறைப்பு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி அமெரிக்க ராணுவத்தில் சுமார் 25 ஆயிரம் தரைப்படை ராணுவ வீரர்களை குறைக்க முடிவு செய்துள்ளனர். இதன்மூலம் எதிரி நாடுகளை சமாளிக்கும் வகையில் நவீன ஆயுதங்கள் உற்பத்திக்கான செலவை அதிகரிக்க உள்ளதாக ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Night
Day