அமெரிக்க சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்க சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 100 நாட்களை தாண்டியுள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீது ஹமாஸ் அமைப்பு ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குறி வைத்து தாக்குதல் நடத்துகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 நாடுகள் இணைந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், அரபிக்கடலில் ஏடன் வளைகுடா பகுதியில் சென்றுகொண்டிருந்த அமெரிக்க சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

Night
Day