அமெரிக்‍கா, தென்கொரியா கூட்டு பயிற்சிக்‍கு வடகொரியா பதிலடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்‍கா, தென்கொரியா கூட்டு பயிற்சிக்‍கு பதிலடி கொடுக்‍கும் விதமாக வடகொரியா நீருக்‍கடியில் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.  வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், தென் கொரியா தான் தங்களது முதன்மை எதிரி என்று கூறி அதற்கு எதிராக அடிக்‍கடி தாக்‍குதல் நடத்தி வருகிறது. இந்தநிலையில் சமீபத்தில் அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படையினர் ஜேஜு தீவு பகுதியில் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டனர். இது வட கொரியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக வடகொரியா கண்டனம் தெ​ரிவித்தது. மேலும் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கொரியாவின் கிழக்குக் கடல் பகுதியில் கட்டமைக்கப்பட்டு வரும் நீர்மூழ்கி அணு ஆயுத அமைப்பான 'ஹேயில்-5-23'-ன் முக்கியமான சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது. 

Night
Day