அமெரிக்‍க, சீன வர்த்தகப் போர் எதிரொலியால் கச்சா எண்ணெய் விலை சரிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


அமெரிக்‍க, சீன வர்த்தகப் போரால் கச்சா எண்ணெய் விலை பெருமளவு சரிந்துள்ளது. சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்‍க அதிபர் ட்ரம்ப் 34 சதவீதம் கூடுதல் வரி விதித்துள்ளார்.
பதிலுக்‍கு அமெரிக்‍காவும் கூடுதல் வரி விதித்துள்ளது. ட்ரம்ப் வரிவிதிப்பால் சர்வதேச பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்ததுடன் அமெரிக்‍காவில் கச்சா எண்ணெய் விலை பெருமளவு சரிந்துள்ளது. பிரென்ட் ரக கச்சா எண்ணெய் 63 டாலர்களாக குறைந்துள்ளது. வெஸ்ட் டெக்‍சாஸ் இன்டர்மீடியட் ரக கச்சா எண்ணெய் விலை எப்போதும் இல்லாத வகையில் 59.49 அமெரிக்‍க டாலர்களாக குறைந்துள்ளது. இந்த ரக கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்‍கு இந்திய ரூபாய் மதிப்பில் 5 ஆயிரத்து 106 ரூபாயாக குறைந்துள்ளது. அதிபர் ட்ரம்பின் வரி விதிப்பால் அமெரிக்காவில் 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை மிகப்பெரும் சரிவை சந்தித்துள்ளது.

Night
Day