அமெரிக்‍க அதிபர் தேர்தலில் கமலா ஹாரீசுக்கு ஆதரவு அதிகரிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரீசுக்கு ஆதரவாக பிரசாரத்தில் 3லட்சத்து 60ஆயிரம் தன்னார்வலர்கள் சேர்ந்துள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. உடல்நிலை காரணமாக ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான பைடன் விலகினார். இதனையடுத்து துணை அதிபர் கமலா ஹாரீஸ் அதிபர் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். குடியரசு கட்சியின் வேட்பாளரான முன்னாள் அதிபர் டிரம்பை எதிர்த்து போட்டியிடும் கமலா ஹாரீஸ் அடுத்த மாதம் சிகாகோவில் நடக்கும் மாநாட்டில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார். இந்நிலையில் கமலா ஹாரீசுக்கான ஆதரவு பெருகி வருகிறது. ஒரே வாரத்தில் சுமார் 200 மில்லியன் டாலர் தேர்தல் பிரசார நிதி சேர்ந்துள்ளது. மேலும் கமலா ஹாரீஸ் பிரசாரத்தில் 3 லட்சத்து 
60 ஆயிரம் தன்னார்வலர்கள் சேர்ந்துள்ளனர். 

Night
Day