அரசு ரகசியம் கசிந்த வழக்கு : இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாகிஸ்தானில் அரசு ரகசியங்களை கசிய விட்ட வழக்கில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு இஸ்லாமாபாத் சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. பிரதமராக பதவி வகித்த காலத்தில் அரசு ரகசியங்களை கசிய விட்டதாக குற்றம் சாட்டப்பட்டு இம்ரான் கான் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு விசாரணை இஸ்லாமாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று திர்ப்பு வழங்கப்பட்டது. முன்னாள் பிரதமர் இம்ரான்கான், முன்னாள் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி ஆகியோருக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி அப்துல் ஹஸ்மத் ஜுல்கர்னெய்ன் தீர்ப்பளித்தார். ஏற்கனவே பரிசு பொருள் வழக்கில் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வரும் 8 ஆம் தேதி அந்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Night
Day