அலெக்சி நவால்னி மரணத்துக்கு ரஷ்ய அதிபர் புதின்தான் பொறுப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி மரணத்துக்கு அதிபர் விளாடிமிர் புதின்தான் பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜோ பைடன், ரஷ்யாவில் அதிபர் விளாடிமிர் புதினின் ஊழல் மற்றும் வன்முறை ஆகியவற்றுக்கு எதிராக தைரியமாக  நின்றவர் அலெக்சி நவால்னி எனவும், இதனால் தான் நவால்னியை புதின் சிறை வைத்ததாகவும் சுட்டிக்காட்டினார். 
அலெக்சி மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் இட்டுக் கட்டப்பட்டவை எனக் கூறிய ஜோ பைடன், அதிபர் புதின்தான் சிறையில் இருந்த நவால்னிக்கு விஷம் கொடுத்திருக்க வேண்டும் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். 

Night
Day