அல் அக்ஸா மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் - 4 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காசாவின் அல் அக்ஸா மருத்துவமனை மீது இஸ்ரேலிய ராணுவம் நேற்று நடத்திய வான்வழித் தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும் 17 பேர் காயமடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். இதனை மருத்துவமனையில் இருந்த உலக சுகாதார அமைப்பின் பணியாளர்கள் கூறியதாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். ஆனால் இந்த தாக்குதலை இஸ்ரேல் மறுத்துள்ளது. இதனிடையே இஸ்ரேல் தாக்குதலில் பலியான பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 32 ஆயிரத்து 623 ஆகவும், காயமடைந்தோர் எண்ணிக்கை 75 ஆயிரத்து 92 ஆகவும் உயர்ந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Night
Day