ஆப்கானிஸ்தானில் எரிபொருள் ஏற்றிச்சென்ற லாரி மீது பேருந்து மோதி விபத்து - 21 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெல்மண்ட மாகாணத்தில் எரிபொருள் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி மீது பேருந்து மோதி ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உடல் கருகி உயிரிழந்னர். கெராஷ்க் மாவட்டம் அருகே பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, எதிர் திசையில் எரிபொருள் ஏற்றிச்சென்ற லாரி மீது மோதி ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் இதில் காயமடைந்த 40 பேரை மீட்ட தீயணைப்புத்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதேபோல் கடந்தாண்டு ஏற்பட்ட விபத்தில் 31 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

varient
Night
Day