ஆரோக்கியமற்ற உணவுகளின் விளம்பரங்களுக்கு தடை - பிரிட்டன் அரசு அதிரடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய உணவுகளின் விளம்பரங்களை பகல் நேரங்களில் ஒளிபரப்புவதற்கு தடை விதிக்க இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது.

பர்கர், பீட்சா உள்ளிட்ட உணவுகளை அதிகளவில் உண்ணும் இங்கிலாந்தில் வசிக்கும் குழந்தைகள், பன்மடங்கு உடல் பருமன்  அதிகரித்து காணப்படுவதாக அந்நாட்டின் தேசிய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. இதனால், குழந்தைகள் எதிர்கொள்ளும் உடல் பருமன் பிரச்னையை தடுக்கும் விதமாக, ஆரோக்கியமற்ற உணவுகளின் விளம்பரங்களை பகல் நேரங்களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கு தடை விதிக்க இங்கிலாந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

Night
Day