இந்திய விற்பனையால் எகிறும் ஆப்பிள் நிறுவன வருவாய்!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவில் ஐபோன்கள் விற்பனை அதிகரித்ததை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் 5 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் எட்டாயிரத்து 450 கோடி டாலராக இருந்த ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய், இந்தாண்டு அதே காலாண்டில் எட்டாயிரத்து 580 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இதேபோல் கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட 24 நாடுகளில் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் கும் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஐபோன்கள் விற்பனை மூலம் மூவாயிரத்து 930 கோடி டாலரும், மேம் கணினி மூலம் 701 கோடி டாலரும் வருமானம் கிடைத்துள்ளது.

Night
Day