எழுத்தின் அளவு: அ+ அ- அ
பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக வன்முறையை தூண்டும் வகையில் கருத்துகளை பரப்பியதாக பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுத்லாதலமான காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சார்க் உள்ளிட்ட அனைத்து விசாக்களையும் ரத்து செய்து 48 மணி நேரத்தில் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. மருத்துவ விசாவில் இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற நாளை வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
சிந்தநதி ஒப்பந்தத்தையும் இந்தியா தற்காலிகமாக ரத்து செய்வதாக அறிவித்தது. இந்நிலையில் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு வன்முறை மற்றும் வகுப்புவாத உணர்வுகளை தூண்டும் வகையில் கருத்துகளை பரப்பியதற்காக 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் இர்ஷாத் பாட்டி, அஸ்மா ஷிராசி ஆகியோரின் யூடியூப் சேனல்களும் தடை செய்யப்பட்டுள்ளன.