இந்தியாவுடனான உறவு வலுவானது - வெளியுறவுத்துறை செயலாளரிடம் வங்கதேசம் உறுதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவுடனான உறவு வலுவானது, நெருக்கமானது என்று வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் கூறியுள்ளார். 


வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், டாக்காவில் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸை, வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி சந்தித்து பேசினார். அப்போது, இந்தியாவுடன் உறவு வலுவானது, நெருக்கமானது என்றும், இந்தியாவில் இருந்து முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வெளியிடும் அறிக்கைகள் வங்கசேதத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் முகமது யூனுஸ் கூறினார். அவரிடம், ஹிந்துக்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறித்து கவலை தெரிவித்ததாகவும், வங்கதேச இடைக்கால அரசுடன் இணைந்து  பணியாற்றும் இந்தியாவின் விருப்பத்தை தெளிவுபடுத்தியதாகவும் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

varient
Night
Day