இந்திய தேர்தல் - மார்க் ஜுக்கர்பர்க்கின் சர்ச்சை கருத்து - மன்னிப்பு கோரியது மெட்டா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய தேர்தல் குறித்த மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கின் கருத்துக்கு அந்நிறுவனம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது. 

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜுக்கர்பர்க், கொரோனாவிற்கு பிறகு 2024ம் ஆண்டு உலகின் பல பகுதிகளில் நடந்த தேர்தல்களில் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஆட்சியில் இருந்த கட்சிகள் மீண்டும் தேர்வு செய்யப்படவில்லை என்று இருந்தார். அவரது கருத்து தவறானது என்று கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மீதான நம்பிக்கையை இந்திய மக்கள் மீண்டும் உறுதிப்படுத்தியதாக கூறியிருந்தார். இந்நிலையில், மத்திய அமைசசர் அஸ்வினி வைஷ்ணவிடம், மெட்டா இந்தியா-வின் துணைத் தலைவர் ஷிவ்நாத் துக்ரல் மன்னிப்பு கோரியுள்ளா்.

Night
Day