இந்துக்கள் மீதான வன்முறை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கனடா வாழ் இந்தியர்கள் போராட்டம்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கதேசத்தில், இந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறை தாக்குதலைக் கண்டித்து கனடா வாழ் இந்தியர்கள், வங்கதேச தூதரகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்கதேசத்தில், சிறுபான்மையினரான இந்துக்களை கொல்வதுடன், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது, கோயில்களை சூறையாடுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு உலகில் பல்வேறு பகுதிகளில் வாழும் இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கனடாவில் வசிக்கும் இந்தியர்கள், டொராண்டோவில் உள்ள வங்கதேச தூதரகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வங்கதேசத்தில் இந்துப் படுகொலைகளை நிறுத்தவேண்டும் என்றும், இந்துக்களை பாதுகாக்க இந்தியா, கனடா உள்ளிட்ட அரசுகள் வங்கதேச அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்

Night
Day