உலகம்
வடகொரியாவுக்கு ஒரு மில்லியன் பீப்பாய் எண்ணெய் வழங்கிய ரஷ்யா
உக்ரைன் உடனான போரில் உதவி வரும் வடகொரியாவுக்கு ஒரு மில்லியன் பீப்பாய் எண?...
இந்தோனேசியாவில் 153 பயணிகளுடன் சென்ற விமானத்தில் தூங்கிய இரு விமானிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கடந்த ஜனவரி 25ஆம் தேதி சுலவேசி தீவுக்குட்பட்ட கேண்டரி பகுதியில் இருந்து தலைநகர் ஜகார்தா நோக்கி 153 பயணிகளுடன் லயன் ஏர்லைன்ஸ் விமானம் சென்றுள்ளது. நடுவானில் விமான பறந்து கொண்டிருந்த போது, இரு விமானிகளும் ஆழ்ந்த உறக்கத்துக்கு சென்றுள்ளனர். ஏறத்தாழ அரை மணி நேரம் விமானிகள் தூங்கிய நிலையில் விமானம் ஜகார்த்தாவை தாண்டி சென்று கொண்டு இருந்ததால் இந்தோனேசிய விமான கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் கலக்கம் அடைந்தனர். பின்னர் உறக்கத்தில் இருந்து கண்விழித்த தலைமை விமானி, விமானம் தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதை அறிந்து, மீண்டும் ஜகார்த்தா நோக்கி திருப்பி உள்ளார். இதுகுறித்த விசாரணை முடிவில் விமானத்தை ஓட்டிவந்தபோது தூங்கிய விமானிகள் இருவரையும் லயன் ஏர்லைன்ஸ் நிறுவனம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.
உக்ரைன் உடனான போரில் உதவி வரும் வடகொரியாவுக்கு ஒரு மில்லியன் பீப்பாய் எண?...
மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையை எட்டிய பாஜக கூட்டணிமக?...