இரட்டை கோபுர தாக்குதல் - பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட காலித் ஷேக் முகமதுவுக்கு அமெரிக்கா மீண்டும் மரண தண்டனை விதித்தது. முன்னதாக இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட காலித் ஷேக் முகமது மற்றும் அவருடன் குற்றஞ்சாட்டப்பட்ட 2 பேருடன் அமெரிக்கா வழக்குசார் ஒப்பந்தம் மேற்கொண்டது. அந்த ஒப்பந்தத்தின் கீழ், தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை 3 பேரும் ஒப்புக் கொள்வார்கள் என்றும் அதற்கு பதிலாக மரண தண்டனையில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இந்த தாக்குதல்களில் சுமார் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதால், அவர்களின் உறவினர்களின் கருத்துகளை கேட்டு அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டிருப்தாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் அவர்களுக்கு மரண தண்டனைக்கு பதிலாக ஆயுள் தண்டனை வழங்கப்படும் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Night
Day