இலங்கையின் புதிய அதிபராக அநுர குமார திசநாயக பதவியேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

இலங்கையின் 9வது அதிபராக தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திசநாயக பதவியேற்றார். 

இலங்கை அதிபர் தேர்தல் நேற்று முன் தினம் நடைபெற்ற நிலையில், மாலையிலேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல் சுற்றில் யாருக்கும் பெரும்பான்மையான 50 சதவிகித வாக்குகள் கிடைக்காத நிலையில், முதல் முறையாக இரண்டாம் விருப்ப வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதன் இறுதியில் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவர் அனுர குமார திசநாயக்க, 55 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இதனையடுத்து கொழும்புவில் உள்ள அதிபர் செயலகத்தில் இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார இன்று பதவியேற்றார். அவருக்கு இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜயந்த ஜயசூரிய பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதிய அதிபராக பதவியேற்றப்பின் இலங்கை மக்களிடையே உரையாற்றிய அனுர குமார திசநாயக, இலங்கையில் ஆட்சி மாற்றம் மட்டுமின்றி, பொருளாதார வளர்ச்சியும் முக்கியம் என தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து பதவியேற்பு விழாவில் பங்கேற்ற புத்த மத துறவிகளிடம் ஆசி பெற்ற புதிய அதிபர் அநுர குமார திசநாயக-விற்கு கையில் கயிறு கட்டி புத்த துறவிகள் வாழ்த்தினர். 

இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார திசநாயக பதியேற்றுள்ள நிலையில், தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கை தமிழர் பிரச்சனைகளில் இனியாவது தீர்வு கிடைக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

Night
Day