இலங்கையில் தோட்ட தொழிலாளர் ஊதியம் ரூ.1,700 ஆக உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இலங்கையில் பெருந்தோட்ட மக்களின் ஊதியம் ஆயிரத்து 700 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஹட்டன் கொட்டகலையில் நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரசின் மே தின கூட்டத்தில், அதிபர் ரணில் விக்ரமசிங்கே கலந்து கொண்டார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இலங்கை தொழிலாளர் கட்சியை சேர்ந்த பெருந்தோட்ட மக்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக, பெருந்தோட்ட மக்களின் ஊதியம் ஆயிரத்து 700 ரூபாயாக அதிகரிக்கப்படுவதாக அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்தார். இது இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பல வருட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.

Night
Day