இலங்கையில் புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவை பதவியேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்‍கள் சக்‍தி கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில் பிரதமராக ஹரிணி அமரசூரிய மீண்டும் பதவியேற்றுக்‍கொண்டார். அவருடன் 20 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் அனுர குமார கட்சியான தேசிய மக்கள் சக்தி கூட்டணி 159 இடங்களைக் கைப்பற்றி இருந்தது. இதையடுத்து புதிய பிரதமர் தலைமையிலான அமைச்சரவை இன்று பதவியேற்றது. அதன்படி இலங்கையின் புதிய பிரதமராக டாக்‍டர் ஹரிணி அமரசூரிய பதவியேற்றார். இவருக்கு உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடற்தொழில் நீரியல் வழங்கல் அமைச்சராக ராமலிங்கம் தமிழில் பதவியேற்றுக் கொண்டார். வெளி விவகாரத்துறை அமைச்சராக விஜித ஹேரத் பதவியேற்றுக்கொண்டார். மகளிர் மற்றும் சிறுவர் விவகாரத்துறை அமைச்சராக சரோஜா சாவித்திரி பால்ராஜ் பொறுப்பேற்றுக்கொண்டார். இலங்கையின் 3வது பெண் பிரதமரான ஹரிணி அமரசூரிய டெல்லி இந்துக்‍கல்லுரியில் படித்த மாணவியாவார்.

Night
Day