இலங்கையை சூறையாடும் புயல்

எழுத்தின் அளவு: அ+ அ-

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், கடல் அலைகள் பல அடிக்கு எழும்பி, அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி வருகின்றனர். இதனிடையே, காரைதீவில் 5 சிறுவர்கள் உட்பட 7 பேர் சென்ற மாட்டு வண்டி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதில் 2 சிறுவர்கள் மீட்கப்பட்ட நிலையில், மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மழையின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Night
Day